சீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பியவர் உயிரிழப்பு

சீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பியவர் உயிரிழப்பு

1 mins read
9610d789-e18d-4d23-af0b-901b00a9a405
படம்; இணையம் -
Google News Preferred Icon

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த திரு சக்திகுமார், கடந்த 4ஆம் தேதி சீனாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் இம்மாதம் 14ஆம் தேதி உயிரிழந்தார்.

நுரையீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை நோய்களால் அவர் இறந்தார் என்று அறியப்படுகிறது.

சக்திகுமாரின் இறப்பு குறித்து சுகாதாரத்துறையிடம் புதிய தலைமுறை ஊடகம் விசாரித்தபோது சக்திகுமார் சீனாவிலிருந்து திரும்பியவர் என்பதை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் சீனாவில் இருந்து திரும்பியவர்களை கண்காணித்து வருபவர்களின் பட்டியலில் சக்திகுமார் பெயர் இடம்பெறவில்லை.

சீனா நாட்டிலிருந்து வருபவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருந்து 14 நாட்களுக்குப் பிறகே வெளியே செல்ல அனுமதிப்பதாக அதிகாரிகள் சொல்லி வரும் நிலையில் அனைவரும் இந்த சம்பவத்தால் பரபரப்பாகியுள்ளனர்.