லக்னோ: பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற விடைத்தாளுக்குள் நூறு ரூபாய் வைத்தால் ஆசிரியர்கள் கண்களை மூடிக்கொண்டு மதிப்பெண் வழங்குவார்கள் என்று மாணவர்கள் மத்தியில் பேசிய பள்ளி முதல்வர் கைதானார். உத்தரப்பிரதேச மாநிலம் மவு நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் முதல்வரான பிரவீன் மால் தேர்வில் காப்பி அடிக்கும்போது சிக்கினாலும் பயப்படத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். "தேர்வு கண்காணிப்பாளர் கன்னத்தில் அறைந்தாலும் கூட பொறுமையாக இருங்கள். எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்காமல் இருந்துவிடாதீர்கள். விடைத்தாளில் 100 ரூபாய் தாளை வையுங்கள். ஆசிரியர்கள் கண்களை மூடிக் கொண்டு மதிப்பெண் வழங்குவார்கள்," என்று பிரவீன் பால் பேசிய காணொளி வெளியானதை அடுத்து அவர் கைதானார்.
ரூ.100 வைத்தால் கூடுதல் மதிப்பெண்: அறிவுரை கூறிய பள்ளி முதல்வர் கைது
1 mins read

