நடுத்தெரு நடனப் பித்து கைது

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற நடனப் பித்து, டிக்டாக்கில் தனது திறமைகளை வெளியிட்டு பலரின் பாராட்டுகளை அள்ளவேண்டும் என்ற தீரா ஆசையுடன் நடுத்தெருக்களில் ஆடி ஆடி பலரையும் அலைக்கழித்துவிட்டதாக போலிஸ் தெரிவித்தது.

பேருந்து நிலையம், தெருக்களில் நடந்து செல்லும்போதே திடீரென நடனப் புயலாக மாறி விடும் கண்ணன், எதிரில் நடந்து வரும் பொதுமக்கள், பெண்கள் மீது மோதுவது போல் சென்று பின் விலகி நடனம் ஆடி வந்தார். 

இது பலருக்கும் பயத்தைக் கிளப்பிவிட்டது. தன் நடனக் காட்சிகளை அவர் டிக்டாக்கில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பி வந்தார். 

பொது இடங்களில் மக்கள் திடீரென அதிர்ச்சி அடையும் வகையில் கண்ணன் நடனமாடுவது பிரச்சினையானதால் போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து போலிஸ் கண்ணனைக் கைது செய்தது.

புதுக்கோட்டை மற்றும் திருச்சி பேருந்து நிலையங்கள், திருச்சி ரயில்வே நிலையம் என பல்வேறு இடங்களில் கண்ணன் நடன லீலைகளை அரங்கேற்றியது அம்பலமானது.

#டிக்டோக் #தமிழ்முரசு