டெல்லி: கட்டடம் சாய்ந்ததால் அலறல், பீதி

டெல்லி: கட்டடம் சாய்ந்ததால் அலறல், பீதி

1 mins read

புதுடெல்லி: தெற்கு டெல்லியின் முனிர்கா பகுதியில் ஒரு ஆறு மாடிக் கட்டடம் ஒன்று நேற்று முன்தினம் காலை 5.30 மணி அளவில் ஒருபக்கமாக லேசாக சாய்ந்ததாக தகவல் பரவியதால் அதில் குடியிருந்தவர்கள் அலறியடித்து வெளி யேறினர். இக்கட்ட டத்திலுள்ள 45 வீடுகளில் சுமார் நூறு பேர் வசித்து வருகின்றனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வடக்கு வாசல் முன்புறம் கட்டடம் அமைந்து உள்ளது. கட்டடம் சாய்ந்திருப்பதை அந்த வழியாகச் சென்ற போலிஸ்காரர் ஒருவர் பார்த்துவிட்டு எச்சரித்தார். இதனால் குடியிருப்பாளர்களிடையே பீதி ஏற்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரி கள் விரைந்து சென்று கட்டடத்தைப் பார்வையிட்டனர்.