சந்திரபாபு நாயுடுவின் 5 வயது பேரனுக்கு ரூ.19 கோடி சொத்து

சந்திரபாபு நாயுடுவின் 5 வயது பேரனுக்கு ரூ.19 கோடி சொத்து

1 mins read
04621481-28b0-4c25-b15a-7cebc95ed46c
தமது பேரனுடன் சந்திரபாபு நாயுடு. படம்: இந்திய ஊடகம் -

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் 5 வயது பேரனின் சொத்து மதிப்பு 19 கோடியே 42 லட்சம் ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஒவ்வோர் ஆண்டும் தமது குடும்ப சொத்து விவரங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் கடந்த நிதியாண்டு இறுதியில் இருந்து சொத்து மதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், சந்திரபாபு நாயுடு சொத்துகளின் நிகர மதிப்பு 3 கோடியே 87 லட்சம் ரூபாய், அவரது மகன் லோகேஷ் 19 கோடி ரூபாய், மருமகள் நாரா பிராமணி 11 கோடியே 51 லட்சம் ரூபாய், பேரன் நாரா தேவன்ஸ் 19 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

#சந்திரபாபுநாயுடு #சொத்துவிவரம் #இந்தியா #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்