மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லலிதா குமாரி, 30.
பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த இவர், தமக்குள் ஆண் தன்மை அதிகமாக இருப்பதை உணர்ந்து தம்மை ஆணாக மாற்றிக்கொள்ளும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
மும்பையில் உள்ள ஜார்ஜ் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கு மேல் மூன்று கட்டமாக நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஆணாக மாறினார் லலிதா குமாரி.
உடனே தமது பெயரை லலித் என்று மாற்றிக்கொண்டார். இது தொடர்பாக மாநில அரசிடம் அனுமதி பெற்று ஆண் காவலராக பணியில் சேர்ந்தார் அவர்.
திருமண ஆசை வந்ததால் பொருத்தமான பெண்ணை தீவிரமாகத் தேடி வந்தார் லலித்.
அதற்குப் பலன் கிடைத்தது; உடனடியாக திருமணமும் நடைபெற்றது.
திருமண புகைப்படைத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய பின்னர் அது வேகமாகப் பரவி வருகிறது.
லலித்தாக மாறி மணவாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் லலிதா குமாரியை இணையவாசிகள் வாழ்த்தி வருகின்றனர்.
#பெண்போலிஸ் #இந்தியா #தமிழ்முரசு

