புதுடெல்லி: கொரோனா கிருமி பாதிப்பால் சீனாவின் பொருளியல் கடும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில் உலக நாடுகள் சீனாவிடமிருந்து பொருட்கள் வாங்குவதையும் விற்பதையும் தற்போதைக்கு நிறுத்தியுள்ளன.
இந்தியாவின் வர்த்தகத்தில் கொரோனாவின் ஒட்டுமொத்த தாக்கம் மிதமானதாக இருக் கும் என எதிர்பார்க்கப்படு கிறது.
இந்தியா தனது மின் இயந்திரங்களில் 40 விழுக்காட்டை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.
மேலும் இயந்திர சாதனங்க ளில் மூன்றில் ஒரு பகுதியை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.
இந்தியா சீனாவை பெரி தும் நம்பியுள்ள ஐந்து இறக்கு மதிப்பொருட்கள் - மின் இயந்திரங்கள், இயந்திர உபகரணங்கள், கரிம இரசாய னங்கள், பிளாஸ்டிக் மற்றும் ஆப்டிக்கல், அறுவை சிகிச்சை கருவிகள் ஆகும். இதனால் இந்தியாவின் இறக்குமதி 28% பாதிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சீனாவில் தொலைக்காட்சி 'பேனல்' உற்பத்தி முடங்கி இருப்பதால் இந்தியாவில் தொலைக்காட்சிகளின் விலை அடுத்த மாதம் முதல் 10 விழுக்காடு வரை உயரலாம் என்று கூறப்படுகிறது.
குளிரூட்டி மற்றும் குளிர் சாதனங்களுக்கான உதிரி பாகங்களின் விநியோகமும் தடைபட்டுள்ளதால் அவற்றின் விலையும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

