சண்டிகர்: அமெரிக்க சமூக சேவை நிறுவனமான சுலப் இண்டர்நேஷனல் 2017ஆம் ஆண்டு திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத ஒரு கிராமத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது.
அதன்படி இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள மரோரா என்னும் கிராமத்தில் கழிவறைகள் கட்டப்பட்டன. மேலும் விதவைகளுக்கும் கணவரால் கைவிட்டப்பட்ட பெண்களுக்கும் இலவச கல்வி வழங்கும் திட்டங்களும் அங்கு செயல்படுத்தப்பட்டன.
இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டபோதுதான் முதல் முதலாக பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சந்தித்துக் கொண்டனர். அந்நேரத்தில் மரோரா கிராமம் இச்சிறப்பை பெற்றதால் அக்கிராமத்திற்கு 'டிரம்ப் கிராமம்' என பெயரிடப்பட்டது.
காலப்போக்கில் அக்கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. அதன் பிறகு அக்கிராம மக்கள் தண்ணீர் லாரிகளையே நம்பி இருந்தனர். டேங்கர் லாரி தண்ணீரை ரூ.1000க்கு வாங்குவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து அங்கு கட்டப்பட்ட கழிப்பறைகள் மற்றும் அனைத்து திட்டங்களும் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த கிராமத்தில் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை சுலப் இண்டர்நேஷனல் நீக்கியது. ஆனால் 'டிரம்ப் கிராமம்' என்ற பெயர் மட்டும் அப்படியே இருந்தது.
இந்நிலையில். தற்போது டிரம்ப் இந்தியா வருவதைத் தொடர்ந்து, அக்கிராம மக்கள் "எங்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். இதனை டிரம்ப் கவனிக்க வேண்டும்," என கோரிக்கை விடுத்துள்ளனர்.

