தாக்கரே மனமாற்றம்; காங்கிரஸ் தடுமாற்றம்

புதுடெல்லி: குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியைச் சந்தித்த பின்னர் தனது நிலையை மாற்றிக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட சிவசேனா, தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களைப் போலவே மகாராஷ்டிராவும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. முதல்வர் உத்தவ் தாக்கரே தீவிரமாக எதிர்ப்பு காட்டி வந்தார். அத்துடன் பிரதமர் மோடியின் திட்டங்களை விமர்சித்து சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளிதழ் செய்தி வெளியிட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் உத்தவ் தாக்கரேவும் அவரது மகன் ஆதித்ய தாக்கரேவும் பிரதமர் மோடியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தனர். முதல்வராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியை உத்தவ் தாக்கரே சந்திப்பது இதுவே முதல் முறை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தந்தையும் மகனும் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்புகளுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் உத்தவ் தாக்கரே குடியுரிமை திருத்தச் சட்டமும் தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அவர் கூறுகையில், “மகாராஷ்டிர மாநிலம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினோம். குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ), தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (என்பிஆர்) போன்றவை குறித்தும் அவருடன் விவாதித்தோம். சிஏஏ குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. சிஏஏ, என்பிஆர் ஆகியவற்றை அமல்படுத்துவோம்,” என்றார்.

அவரது இந்த அறிவிப்பு கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்குப் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தவ் தாக்கரே-மோடி சந்திப்பில் பேசப்பட்டது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் தாக்கரேவின் இந்த அறிவிப்பால் சிவசேனா கூட்டணியில் விரிசல் விழும் நிலை உருவாகியிருக்கிறது. மோடியை சந்திக்கும் முன்னர் வரை எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர் இப்போது ஒரேயடியாக மாறிவிட்டாரே என கூட்டணி கட்சிகள் புலம்புவதாகத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!