தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கவிதைகள் எழுதி கின்னசில் இடம்பிடித்த தமிழக இளைஞர்

1 mins read
ca3c2921-3d86-4580-a9e0-5b836a0127c5
கவிதை எழுதி கின்னஸ் சாதனை படைத்த கதிர்வேல் -

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 2020 நிமிடங்களில் 2020 கவிதைகள் எழுதி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜடைகிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல்.

இவருக்கு சிறுவயதில் இருந்தே கவிதை, கதை புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் இருந்து வந்தது.

பள்ளி நாட்களில் இருந்தே கவிதை புத்தகங்களை படித்து வந்த கதிர்வேல், எந்த தலைப்பை சொன்னாலும் உடனடியாக கவிதை எழுதும் திறன் கொண்டவர். பலரும் இவரது கவிதை தொகுப்பை வெகுவாக பாராட்டினார்கள்.

இதையடுத்து, தமிழில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவருக்கு அதிகரித்தது.

அதனை நடைமுறைப்படுத்தும் விதத்தில் 2020 நிமிடங்களில் 2020 கவிதைகளை எழுதி அசத்தியுள்ளார் கதிர்வேல். அவருடைய படைப்பை ஏற்ற கின்னஸ் அமைப்பு கதிர்வேலின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் சேர்த்து அவரது திறமையை அங்கீகரித்துள்ளது.

கதிர்வேலுவுக்கு திரைப்படங்களுக்குப் பாடல் எழுத வேண்டும் என்ற விருப்பமும் உண்டு. அதற்கான வழிமுறைகளில் அவர் முயற்சி செய்து வருகிறார்.

#தமிழகம் #கவிதை #கின்னஸ் #திருப்பத்தூர் #கதிர்வேல்

குறிப்புச் சொற்கள்