அமெரிக்கா: இந்திய இளையர் சுட்டு கொலை

புதுடெல்லி: மணிந்தர் சிங் ஷாஹி என்ற இளையர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார். 

ஹரியானாவைச் சேர்ந்த 31 வயதான அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பணியாற்றி வந்தார். குடும்பத்தில் இவர் மட்டுமே சம்பாதித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி மணிந்தர் சிங் தன் கடையில் பணியில் இருந்த போது, முகமூடி அணிந்த மர்ம நபர் உள்ளே நுழைந்து கைத்துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினான். பின்னர் அங்கிருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றான்.

கொள்ளையன் தப்பிச் சென்ற பிறகே அவனது துப்பாக்கிச்சூட்டில் மணிந்தர் உயிரிழந்தது தெரிய வந்தது. இரு குழந்தைகளுக்கு தந்தை யான மணிந்தரை கொ