லக்னோ: மனைவி வீட்டாரின் வழக்கப்படி, திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆடவரை நாய் சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்று கொடுமைப்படுத்திய சம்பவம் உத்தர
பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தன்னை நாய் போல் குரைக்கச் சொன்னதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.
காஜியபாத்தில் வசித்து வரும் இக்ராமுதீன் என்பவருக்கு கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி திருமணம் நடைபெற்றது. இதனால் இவரது மனைவி குடும்பத்தார் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இக்ராமுதீனின் மனைவி குடும்பத்தார் திடீரென அவர் வீட்டுக்கு வந்து அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், நாய் சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்றதாக இக்ராமுதீன் கூறியுள்ளார்.
"என்னை நாய் போன்று குரைக்குமாறும் கூறினர். இந்தக் கொடுமைகளைக் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர்.
"எனது மனைவியின் இளைய சகோதரர் காவல் துறையில் பணியாற்றுகிறார். அதனால் போலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை," என்று புகார் எழுப்பியுள்ளார் இக்ராமுதீன்.

