மெலனியாவுக்கு பூ கொடுத்து பொட்டுவைத்து வரவேற்ற சிறுமி

புதுடெல்லி: டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்றார். 

நேற்று காலை அதிபர் மாளிகையில் டிரம்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் டெல்லி தெற்கு மோதிபாக் பகுதியில் உள்ள ஓர் அரசு பள்ளியை பார்வையிடுவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மெலனியா டிரம்ப், டெல்லியின் மோதிபாக் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றுக்குச் சென்று குழந்தைகளுடன் உரையாடினார். பாரம்பரிய உடையணிந்திருந்த குழந்தைகள் மெலனியாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பள்ளி முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வகுப்பறைக்குச் சென்று பிள்ளைகளுடன் பிள்ளையாக பேசி மகிழ்ந்தார் மெலனியா.