டெல்லி வன்முறை: மாண்டோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்தது

புதுடெல்லி: குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டதை எதிர்த்து வடகிழக்கு டெல்லியில் இடம்பெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து, தலைமைக்காவலர் ஒருவர் நேற்று முன்தினம் மாண்டார். ஏராளமானோர் காயமடைந்தனர். அவர்களில் இப்போது 9 பேர் மாண்டதாகக் கூறப்படுகிறது.  

இதன்காரணமாக வடகிழக்கு டெல்லியில் ஒரு மாத காலத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று மூடப்பட்டன; பள்ளிகள் திறக்கப்படவில்லை. 

இந்நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி ஆளுநர் அனில் பைஸால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் நேற்று சந்தித்து, நிலைமை குறித்து விவாதித்தனர்.