‘இந்திய குடும்பங்களின் சேமிப்பு சரிவடைந்துள்ளது’

புதுடெல்லி: இந்தியாவில் வசிக்கும் சராசரி மக்களின் சேமிப்பு விகிதிம் இறங்குமுகத்தில் செல்வதாக மத்திய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சாமானியக் குடும்பத்தினர் பலரும் தங்களின் வருவாயில் சுமார் 60% சேமிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்றும் ஆனால் தற்போது இதுபோல் சேமிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் மொத்த சேமிப்பின் அளவு 2007-08ஆம் ஆண்டு 36% ஆக இருந்தது.

கடந்த 2012ஆம் ஆண்டிலும் கூட இந்த சேமிப்பு விகிதம் 34.6% ஆக இருந்தது. ஆனால், 2019ஆம் ஆண்டில் இதன் அளவு 30.1% ஆக குறைந்துள்ளது என மத்திய புள்ளியியல் அமைப்பு தெரிவித் துள்ளது.

இதேபோல இந்திய குடும்பங் களின் சேமிப்பு அளவை எடுத்துக் கொண்டால் 2012ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23%ஆக இருந்த சேமிப்பு 2019ல் 18% ஆக குறைந்துள்ளது.

மக்களின் சேமிப்பு குறை வதன் மூலம் மத்திய அரசு வெளி நாட்டு வங்கி, முதலீட்டாளர்களிடம் இருந்து வாங்கும் கடனின் அளவு அதிகரிக்கும்.

ஏற்கெனவே, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவின் மொத்த கடன் 2015ஆம் ஆண்டில் 475 பில்லிய னாக இருந்த நிலையில் தற்போது 543 பில்லியனாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த சேமிப்பு குறைவு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இந்த சூழலில், சேமிப்புகளை ஊக்குவிக்கவேண்டிய மோடி அரசு, அதற்கு மாறாக கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகை யில் சேமிப்புக்கான வட்டி விகிதங்களை குறைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!