திருமணத்துக்கு சென்ற  24 பேர் விபத்தில் பலி

ராஜஸ்தான்:  ராஜஸ்தான் மாநிலம், பந்தி பகுதியில் மெஜ் ஆற்றில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த ஐவர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை, திருமண நிகழ்ச்சிக்காக திருமண வீட்டாரின் குடும்பத்தினர்கள், அவர்களது உறவினர்கள்,  மாப்பிள்ளை யின் நண்பர்கள் என மொத்தம் 40 பேர் அந்தப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, பூண்டி என்ற இடத்தில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அந்தப்பகுதியில் உள்ள பாலத்தைக் கடந்து செல்லும்போது திடீரென பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்தது பேருந்து.