புதுடெல்லி: பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் இனிப்புகளில் தயாரிப்புத் தேதியும், அது காலாவதி ஆகும் தேதியும் குறிப்பிடுவது கட்டாயமாகி உள்ள நிலையில், இனிமேல் இதுபோல் பொட்டலங்களில் அடைக்காமல் உதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்புத் தேதியும் அது எந்த தேதிவரை சாப்பிட உகந்தது என்ற தகவலையும் குறிப்பிடுவது வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் கட்டாயம் ஆக்கப்படுவதாக இந்திய உணவுப் பாதுகாப்பு, தர ஆணையம் தெரிவித்துள்ளது.
உதிரி இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி குறிப்பிடுவது கட்டாயம்
1 mins read

