சுடச் சுடச் செய்திகள்

திருச்சி கோயிலில் தங்க நாணயப் புதையல்

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோயிலில் தங்கப் புதையல் கிடைத்துள்ளது.

அங்குள்ள கொட்டாரம் 100 கால் மண்டபத்துக்கு அருகில் வாழைக்கன்றுகள், பூச்செடிகள் நடுவதற்காக தோண்டியபோது  ஒரு செம்புப் பெட்டகம் கிடைத்தது. 

கோவில் நிர்வாக அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அவர்களது முன்னிலையில் முன்னிலையில் கலயத்தில் இருந்த தங்கக்காசுகள் எடுத்து எண்ணப்பட்டன.

அதற்குள் மொத்தம் 505 தங்கக் காசுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒன்று மட்டும் 10 கிராம் எடையிலும் மற்றவை 3.3 கிராம் எடையிலும் இருந்ததாகவும் மொத்தம் 1.716 கிராம் எடையுள்ள தங்க நாணயங்கள் அவை என்றும் கூறப்பட்டது. அதன் மதிப்பு (தங்க எடையின் அடிப்படையில்) சுமார் 61 லட்ச ரூபாய்.

முன்னிலையில், தங்கக்காசுகளை ஒரு பெட்டகத்தில் வைத்து பூட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

தங்கக்காசுகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது தெரியவில்லை. ஆனால், அவை மன்னராட்சி காலத்தவை என்று கூறப்படுகின்றன.

தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகே அது, எந்த காலக்கட்டத்தை சேர்ந்தது என தெரிய வரும் என்று கோவில் நிர்வாக அதிகாரி மாரியப்பன் தெரிவித்தார்.

#திருச்சி #திருவானைக்காவல் #தங்க நாணயம் #புதையல் #தமிழ்முரசு
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon