ஒடிசாவில் 34,000 பள்ளிகளில் குடிநீர், கழிவறை வசதி இல்லை

புவனேஸ்வரம்: ஒடிசாவில் உள்ள 34,000 பள்ளிகளில் குடிநீர், கழிவறை வசதிகள் இல்லை என்று அந்த மாநில அமைச்சர் சட்டப் பேரவையில் தெரிவித்து அதிர்ச்சியைக் கிளப்பி இருக்கிறார்.

ஒடிசாவில் உள்ள 90 பள்ளிகளில் கரும்பலகை வசதி இல்லை என்றும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 34,394 பள்ளிகளில் குடிநீர், கழிவறை வசதி செய்யப்படவில்லை என்றும் அந்த மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சமிர் ரஞ்சன் தாஸ் சட்டப்பேரவையில் குறிப்பிட்டது வியப்பாக இருக்கிறது என்று பல தரப்பினரும் தெரிவிக்கிறார்கள்.

அதேபோல 37,645 பள்ளிகளில் விளையாட்டு திடல்கள் இல்லை. 2,451 பள்ளிகளில் நூலக வசதியும் 16,368 பள்ளிகளில் சுற்றுச்சுவர் வசதியும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும், பள்ளிக் கல்வித்துறை நிர்வகிக்கும் 51,434 தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த 2018-19ஆம் கல்வியாண்டில் தொடக்கப்பள்ளிகளில் பாதியிலேயே படிப்பைக் கைவிடும் மாணவர்கள் அளவு 5.42% ஆக உள்ளது. இது நடுநிலைப் பள்ளிகளில் 6.93% ஆகவும் உயர்நிலைப்பள்ளிகளில் 5.41 % ஆகவும் இருந்தது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குடிநீர், கழிவறை வசதிகள் இல்லாத பள்ளிக்கூடங்களின் விவரங்களை அமைச்சர் தெரிவிக்கவில்லை என்றாலும் இந்த விவரங்கள் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளதாகத் தகவல்கள் கூறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!