மாணவிகள் 15 பேருக்குப் பாலியல் தொல்லை; கைது

மாணவிகள் 15 பேருக்குப் பாலியல் தொல்லை; கைது

1 mins read

நவி மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை பகுதியில் 15 மாணவி களுக்குப் பாலியல் தொல்லை அளித்து வந்த அரசுப் பள்ளி கணினி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.

அந்தப் பகுதியில் மஹாபெ எனுமிடத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கணினி வகுப்பின்போது அந்தக் கணினி ஆசிரியர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக போலிஸ் தெரிவித்தது.

மாணவிகள் பலரும் அது பற்றி தங்கள் பெற்றோர் மூலமாக போலிசிடம் புகார் தெரிவித்தனர். கணினி ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலிஸ் கைது செய்தது. அவர் மார்ச் 2ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டார்.