அடம்பிடித்து மருத்துவரை மணந்த ஐஏஎஸ் அதிகாரி; வரதட்சணை என்ன தெரியுமா?

அடம்பிடித்து மருத்துவரை மணந்த ஐஏஎஸ் அதிகாரி; வரதட்சணை என்ன தெரியுமா?

1 mins read
157f4069-8b79-452a-9d6d-0b0de0438af1
மருத்துவம் படித்த பல பெண்கள் இவருடைய நிபந்தனைகளை (வரதட்சணை) கேட்டு ஓட்டம் பிடித்தனர். நன்றி: அப்டேட்நியூஸ் -

நெல்லை மாவட்ட பயிற்சி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தனது திருமணத்திற்கு கேட்ட வரதட்சணையைக் கண்டு பல பெண்கள் ஓட்டம் பிடித்த வேளையில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணபாரதி அதற்கு சம்மதித்து மகிழ்ச்சியுடன் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்.

அப்படி என்னதான் கேட்டார் திரு சிவகுரு பிரபாகரன்?

பேராவூரணிக்கு அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல சிரமங்களுக்கிடையே ஐஏஎஸ் அதிகாரியான அவர், "ஒரு மருத்துவரைத்தான் திருமணம் செய்வேன்," என்று உறுதியாக இருந்தார்.

இதை மனதில் கொண்டு அவருடைய பெற்றோர்கள் மருத்துவம் படித்த பெண்ணை கடந்த ஓராண்டு காலமாக தேடி வந்த நிலையில், மருத்துவம் படித்த பல பெண்கள் இவருடைய நிபந்தனைகளை கேட்டு ஓட்டம் பிடித்தனர்.

கடைசியாக சென்னை நந்தனம் கல்லூரியில் கணித பேராசிரியரின் மகளும், மருத்துவருமான கிருஷ்ணபாரதி, திருமணத்துக்கு ஒப்புதல் அளித்தார்.

கடந்த 26ஆம் தேதியன்று இருவரின் திருமணம் நடைபெற்றது.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் மருத்துவர் வாரத்தில் 2 நாட்கள், தனது சொந்த கிராமமான ஒட்டங்காடு மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே ஆட்சியரின் நிபந்தனை.

இதுதான் அவர் வரதட்சணை.

திருநெல்வேலியில் நடைபெற்ற புத்தகத்திருவிழாவை சீரோடும் சிறப்போடும் நடத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் திரு சிவகுரு பிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

#ஐஏஎஸ் #திருமணாம் #மருத்துவர் #வரதட்சிணை #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்