தடுத்து நிறுத்தப்பட்ட மொரீசியஸ் அதிபர்

1 mins read

வாரணாசி: மொரீசியஸ் அதிபர் பிரித்விராஜ் சிங் ரூபன் ஆறு பேருடன் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசிக்கு ஆன்மிக சுற்றுலா வந்திருந்தார்.

வழிபாட்டை முடித்தபின் டெல்லி செல்வதற்காக வாரணாசி விமான நிலையத்துக்கு அவர்கள் சென்றனர். அப்போது அனுமதிக்கப்பட்டதைவிட அதிகச் சுமை உள்ளதாகக் கூறி ஏர் இந்தியா ஊழியர் மொரிசியஸ் அதிபரைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.

கூடுதல் சுமைக்குக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே விமானத்தில் செல்ல அனுமதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்த விமான நிலைய இயக்குநர், விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடமும் ஏர் இந்தியா அதிகாரிகளிடமும் பேசிய பின் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி மொரீசியஸ் அதிபரை விமானத்தில் செல்ல அனுமதித்துள்ளனர்.