புதுடெல்லி: நிர்பயா என்ற மருத்துவப் படிப்பு மாணவி, கடந்த 2012ஆம் ஆண்டு நண்பருடன் பேருந்தில் சென்றபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டார்.
இதன் தொடர்பில் முகேஷ் சிங், வினய், பவன் குமார், அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நால்வரும் 20ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என்று நேற்று நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.

