வாக்காளருக்கு பதில் நாய் படம்

வாக்காளருக்கு பதில் நாய் படம்

1 mins read
ae1ad3fd-3c1b-4f71-998f-ddb9de77b5b8
மேற்குவங்காளத்தில் முர்சிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சுனில் கர்மாகர், 64, என்பவரின் வாக்காளர் அட்டையில் அவர் படத்துக்குப் பதிலாக நாய் படம் இருந்தது. படம்: ஊடகம் -

மேற்குவங்காளத்தில் முர்சிதாபாத் மாவட்டம் ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்த சுனில் கர்மாகர், 64, என்பவருக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அட்டையில் அவர் படத்துக்குப் பதிலாக நாய் படம் இருந்தது. பிறகு அதிகாரிகள் அட்டையைத் திரும்பப்பெற்று சரிப்படுத்திக் கொடுத்தனர். கணினியில் ஏற்பட்ட கோளாறுகள்தான் இந்தத் தவறுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

படம்: இந்திய ஊடகம்