குடியுரிமை ஆவணம் இல்லா ஹரியானா ஆளுநர், முதல்வர்

1 mins read
6ba9f288-9021-4578-8871-29883e741c5e
குடியுரிமைக்கான சான்றுகளைக் கொண்டிராத ஹரியானா ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா (இடது). முதலமைச்சர் மனோகர் லால் கட்டார். படம்: ஊடகம் -

புதுடெல்லி: ஹரியானா ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா, முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோருக்குக் குடியுரிமைக்கான ஆவணங்கள் இல்லை என்று மாநிலத் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.

முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோரின் தகவல்களைப் பெற வேண்டுமானால் தேர்தல் ஆணையத்தை அணுகும்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்டிருந்த பொது நபர் ஒருவரிடம் அது கூறியது.