தெலுங்கானா பேரவையில் ஒலித்த தமிழ்

தெலுங்கானா பேரவையில் ஒலித்த தமிழ்

1 mins read
4b01ecb5-b072-4e1f-a653-dda7fb7e65ab
தெலுங்கானா சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆங்கிலத்தில் உரையாற்றி முடிக்கும் போது திருக்குறளை மேற்கோள் காட்டினார். படம்: ஊடகம் -

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆங்கிலத்தில் உரையாற்றி முடிக்கும் போது திருக்குறளை மேற்கோள் காட்டினார். 'உறு பசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடு' என்ற திருக்குறளை தமது உரையில் குறிப்பட்ட அவர் பின்னர் அதற்கு ஆங்கிலத்தில் விளக்கமும் அளித்தார். மேலும் உரையின் துவக்கத்தில் அவர் பேரவை உறுப்பினர்களுக்கு தமிழில் 'வணக்கம்' தெரிவித்தார். தெலுங்கானா சட்டப் பேரவையில் ஒலித்த முதல் தமிழ்க் குரல் ஆளுநர் தமிழிசையின் குரல்தான் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.