நீரவ் மோடி சொத்துகள் முடக்கம்

நீரவ் மோடி சொத்துகள் முடக்கம்

1 mins read
abe3479b-5478-49a6-8969-fc06e843613b
தொழிலதிபர் நீரவ் மோடி செலுத்த வேண்டிய சொத்து வரியை வசூலிக்க அவரது மூன்று சொத்துகளை மும்பை மாநகராட்சி முடக்கி வைத்துள்ளது. படம்: ஊடகம் -

மும்பை: தொழிலதிபர் நீரவ் மோடி செலுத்த வேண்டிய சொத்து வரியை வசூலிக்க அவரது மூன்று சொத்துகளை மும்பை மாநகராட்சி முடக்கி வைத்துள்ளது. மும்பையில் உள்ள வங்கியில் ரூ.13 ஆயிரத்து 600 கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டார் நீரவ் மோடி. இதையடுத்து லண்டனில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மும்பை மாநகராட்சிக்கு ரூ.9.5 கோடி சொத்து வரி பாக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவருக்குச் சொந்தமான மூன்று அசையா சொத்துகளை மாநகராட்சி முடக்கி வைத்துள்ளது.