செல்லப் பிராணிகளுக்காக மின்சாரம் திருடியவருக்கு ரூ.7 லட்சம் அபராதம்

செல்லப் பிராணிகளுக்காக மின்சாரம் திருடியவருக்கு ரூ.7 லட்சம் அபராதம்

1 mins read
6afad023-f1ee-4989-94c6-731487394d36
-

மும்பை: தமது செல்லப் பிராணிக்காக மின்சாரம் திருடியவருக்கு மகாராஷ்டிர மாநில மின்சார வாரியம் 7 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. குறிப்பிட்ட நபர் தன் வீட்டின் மின் அளவீட்டுக் கருவியுடன் இணைக்காமல், தனியாக ஒரு ஒயரைப் பயன்படுத்தி மின்சாரம் திருடியுள்ளார். இதன்மூலம் தான் ஆசையாக வளர்க்கும் நாய்க்குட்டிகள் இருக்கும் தனி அறையில் உள்ள குளிர்சாதன இயந்திரங்களுக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளார். இதுவரை அவர் 34 ஆயிரத்து 465 யூனிட் மின்சாரம் திருடியிருப்பது தெரியவந்தது. தனது செல்லப் பிராணிகளுக்காக குளிர்சாதன இயந்திரங்களை 24 மணி நேரமும் இயங்க வைத்துள்ளார் அந்த நபர். இதையடுத்து மின்கட்டணம் மற்றும் அபராதமாக 7 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.