ரசாயனம் வெடித்தது: காகிதம் சேகரிப்பவர் கால் பறிபோனது

ரசாயனம் வெடித்தது: காகிதம் சேகரிப்பவர் கால் பறிபோனது

1 mins read
fb6e2013-1301-483d-a94c-2552e84bab91
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் சோதனை நடத்திய வெடிகுண்டு வல்லுநர்கள். படம்: இந்திய ஊடகம் -

பெங்களூரு: குப்பையில் வீசப் பட்டிருந்த ரசாயனக் கலவை வெடித்ததில் பழைய காகிதம் சேகரிக்கும் ஒருவரின் கால் முற்றிலும் பறிபோனது.

பெங்களூரு ஆடுகோடி ரங்கதாசப்பா லே அவுட்டின் அருகில் குப்பைக் கொட்டப்பட்டிருந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை பின்நேரத்தில் நரசிம்மையா, 50, என்பவா் பழைய காகிதங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது எதிர்பாராதவிதமாக குப்பையில் ரசாயன கலவை வெடித்தது. இதில் நரசிம்மையாவின் இடது கால் துண்டிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு விரைந்து அனுப்பப்பட்டார்.

சம்பவ இடத்துக்கு அருகில் சலவைக்கல் தொழிற்சாலைகள் அதிகம் செயல்படுகின்றன. அவையே இதற்குக் காரணம் என்று சொல்லி வழக்குப் பதிந்து போலிஸ் விசாரணை நடத்தி வருகிறது.