புதுடெல்லி: புதுடெல்லியில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தைத் தூண்டிவிட்ட புகாரின் பேரில் டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஜாமியா நகரைச் சேர்ந்த ஜஹான்ஜீப் ஷமி மற்றும் அவரது மனைவி ஹினா பஷீர் பீக் ஆகிய தம்பதி இருவரையும் போலிஸ் நேற்று கைது செய்தது. ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் பிரிவுடன் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பற்றி அதிகாரி கள் விசாரிக்கிறார்கள்.
ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு; புதுடெல்லியில் தம்பதி கைது
1 mins read
கைதாகி உள்ள ஷமி, அவரது மனைவி ஹினா. டெல்லி கலவரம் தொடர்பாக 2,193 பேர் கைதாகி உள்ளனர். 690 வழக்குகள் பதி வாகி உள்ளன. படம்: ஊடகம் -

