புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வரும் முகுல் வாஸ்னிக்குக்கு வயது இப்போது 60க்கும் அதிகம்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராகவும் முன்பு அவர் பதவி வகித்துள்ளார்.
இந்த நிலையில் தனது நீண்டநாள் தோழியான ரவீணா குரானாவை முகுல் வாஸ்னிக் திருமணம் செய்து கொண்டார்.
புதுடெல்லியில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்களான அகமது படேல், அசோக் கெலோட், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

