ரூ.11,234 கோடி நன்கொடை பெற்ற தேசிய கட்சிகள்

ரூ.11,234 கோடி நன்கொடை பெற்ற தேசிய கட்சிகள்

1 mins read

புதுடெல்லி: கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை அடையாளம் தெரியாதவர்கள் மூலமாக தேசிய கட்சிகள் ரூ.11,234 கோடி நன்கொடை பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணாமூல் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த ஆவணங்களை ஆராய்ந்தபோது இந்த விவரம் தெரியவந்ததாக 'ஜனநாயக சீர்திருத்தச் சங்கம்' எனும் ஆய்வுக் குழு கூறியுள்ளது. இந்த 15 ஆண்டு காலத்தில் இப்படி நன்கொடை அளித்தவர்களின் விவரம் குறிப்பிடப்படாமல் தனக்கு ரூ.1,612 கோடி கிடைத்ததாக பாஜகவும் ரூ.729 கிட்டியதாக காங்கிரசும் தெரிவித்து உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் குறிப்பிட்டு இருக்கிறது. இப்படி, தாமாக விருப்பப்பட்டு நன்கொடை அளிப்பவர்களின் விவரங்கள் வெளியிடப்படுவதில்லை.