வெளிநாடுகளிலிருந்து திருமலைக்கு வரவேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்து

வெளிநாடுகளிலிருந்து திருமலைக்கு வரவேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்து

1 mins read
f6df3868-d1ba-483c-97fb-7af1ead4c7af
கொரோனா கிருமிப் பரவலைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. படம்: இணையம் -

உலகெங்கிலும் கொரோனா கிருமித்தொற்று பரவி வரும் வேளையில் இந்தியாவிலும் இதுவரை 62 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவதைத் தவிர்க்குமாறு பக்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலமாகவே இந்தியாவில் கிருமித்தொற்று ஏற்படுகிறது.

எனவே, திருப்பதி கோயிலுக்கு வர விரும்பும் வெளிநாட்டினர் அல்லது வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்து 28 நாட்களுக்குப் பிறகே கோயிலுக்கு வர வேண்டும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொரோனா கிருமிப் பரவலைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொவிட்-19 தொற்று உள்ள நாடுகளிலிருந்து வந்த 465 பயணிகள் அடையாளம் காணப்பட்டு மாநில கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் இதுவரை கொரோனா கிருமித்தொற்று கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பிப்ரவரி 29ஆம் தேதியிலிருந்து ஆந்திராவுக்குத் திரும்பிய 75 பேர் தாமாகவே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு இதுவரை 226 பேர் வீட்டிலேயே 28 நாட்களுக்குத் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர். 232 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உடல்நலக் குறைவுக்காக ஏழு பேர் மருத்துவமனையில் உள்ளனர். 35 பேரின் நாசித் திரவம் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் 33 பேருக்கு கிருமித்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இருவரது பரிசோதனை முடிவுகள் இன்னும் பெறப்படவில்லை.

#கொரோனா #கொவிட்-19 #திருப்பதி #திருமலை #ஆந்திரா

குறிப்புச் சொற்கள்