நாசா விண்வெளி மாநாட்டில் தமிழக மாணவி

நாசா விண்வெளி மாநாட்டில் தமிழக மாணவி

1 mins read
5c2f1cd4-1b57-4794-8ff4-15ae85a094c8
நாசாவில் நடக்கும் அனைத்துலக அளவிலான விண்வெளி அறிவியல் தோ்விலும் காயத்ரி பங்கேற்கிறாா். படம்: தமிழ்க தகவல் சாதனம் -

திருச்சி சமயபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் இறுதியாண்டு படித்துவரும் மாணவி காயத்ரி, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்ல தோ்வாகி உள்ளாா். வரும் ஜூன் மாதம் நாசாவில் நடக்கும் உலகளாவிய விண்வெளி அறிவியல் மாநாட்டில் இவர் பங்கேற்கிறார்.

'ஆஸ்ட்ரோ நெட் மற்றும் கோ 4 குரு' ஆகிய நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் இணையம் மூலம் நடத்திய தகுதித் தோ்வில் சிறந்த திறனாளராகத் தேர்வாகி உள்ள காயத்ரிக்குப் போதிய வசதி இல்லாத நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட நல நிதி பணிக்குழு நிதியில் இருந்து 75,000 ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.

நாசா செல்ல 200,000 ரூபாய் செலவாகும் என்பதால் நிதியுதவி கேட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கடந்த 26ஆம் தேதி இவர் கோரிக்கை மனு அனுப்பினார்.

நாசாவில் நடக்கும் அனைத்துலக அளவிலான விண்வெளி அறிவியல் தோ்விலும் காயத்ரி பங்கேற்கிறாா்.

இத்தோ்வில் தேர்ச்சி பெற்றால், அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் விண்வெளித் துறைசார்ந்த பட்ட மேற்படிப்பைத் தொடரும் வாய்ப்பை காயத்தி பெறுவார் என்று தெரிகிறது.

இதற்கான கல்விக் கட்டணம் முழுவதையும் நாசா விண்வெளி ஆய்வு மையமே ஏற்றுக்கொள்ளும்.

#தமிழக மாணவி #நாசா

குறிப்புச் சொற்கள்