கேரளாவில் நடந்து சென்ற மாணவிகளை அடித்து தூக்கிய கார்; பதறவைக்கும் காணொளி

கேரளாவில் நடந்து சென்ற மாணவிகளை அடித்து தூக்கிய கார்; பதறவைக்கும் காணொளி

1 mins read
4d6486a1-4d0a-4f10-93f9-b6a30f9cb390
-

கொச்சி: கேரள மாநிலம் ஆலப்புழாவின் பூச்சகல் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் சில மாணவிகள் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். இதேபோல் சிலர் இருசக்கர வாகனத்திலும் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது மாணவிகளின் எதிர்புறத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்தபடி ஒரு கார் தாறுமாறாக வந்து கொண்டிருந்தது. வேகமாக வந்த கார் நிலைதடுமாறி மூன்று மாணவிகள் மீது மோதியது.

அந்த மாணவிகள் சாலையில் இருந்து பல அடி தூரம் தூக்கிவீசப்பட்டனர். அதன்பின்னர் சாலைத் தடுப்பில் மோதிய கார் நிற்காமல் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது.

அப்போது சைக்கிளில் வந்த மற்றொரு மாணவி மீதும் கார் பயங்கரமாக மோதி அவரைத் தூக்கி வீசியது. முன்னதாக இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இறுதியாக மரத்தில் மோதி கார் நின்றது.

இந்த விபத்தில் 4 மாணவிகள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இரண்டு மாணவிகளின் கால்கள் உடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மோசமான விபத்து தொடர்பாக சிசிடிவி காணொளி சமூக ஊடக ங் களில் வெளியாகி உள்ளது. அந்த காணொளி காண்போரை அதிரவைத்துள்ளது.

சம்பவம் நிகழ்ந்தபோது ஆலப்புழா பூச்சகல் பகுதியைச் சேர்ந்த மனோஜ், ஆனந்த் ஆகியோர் அந்த காரில் இருந்ததாகவும் போலிஸ் விசாரணையில் அவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.