கழுதையில் ஊர்வலம் சென்ற புதுமாப்பிள்ளை

கழுதையில் ஊர்வலம் சென்ற புதுமாப்பிள்ளை

1 mins read
b13075ec-730f-48fc-921a-d77fac35e751
கழுதை ஊர்வலம் தொடங்கியது. படம்:ஊடகம் -

அவுரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள விதா கிராமத்தில் நேற்று முன்தினம் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு புதுமாப்பிள்ளையான தத்தாத்ரே கெய்க்வாட் என்பவரை கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

கிராம எல்லையில் உள்ள அனுமார் கோவிலில் ஊர்வலம் முடிவடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தாடைகளில் தனக்குப் பிடித்தவைகளை அவர் பரிசாக எடுத்துக்கொண்டார்.

இது குறித்து புதுமாப்பிள்ளை கூறுகையில், "ஊர் பெரியவரான ஆனந்த் ராவ் தேஷ்முக் 90 ஆண்டுகளுக்கு முன் இந்த வழக்கத்தை உருவாக்கினார்.

"அதுமுதல், ஒவ்வொரு ஹோலி பண்டிகை தினத்தன்றும் புதுமாப்பிள்ளையின் கழுதை ஊர்வலம் நடைபெற்று வருகிறது. மாப்பிள்ளை தப்பி ஓடாமல் இருக்க ஹோலி பண்டிகைக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே கிராமத்தினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருவர்," என்றார்.