போலிஸ் நிலையம் மீது குண்டுவீச்சு

போலிஸ் நிலையம் மீது குண்டுவீச்சு

1 mins read

ஜம்மு: தெற்கு காஷ்மீர் மாவட் டத்திலுள்ள கசாபோரா போலிஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் நேற்று காலை கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் போலிஸ் நிலையத் தின் சுற்றுச்சுவர் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் படை போலிஸ்காரர் ஒருவர் காயம் அடைந்தார். உடனே பயங்கரவாதிகள் மீது போலிசார் பதில் தாக்குதல் நடத்தினர்.

ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற னர்.