புதுடெல்லி: உன்னாவ் சிறுமியின் தந்தை கொல்லப்பட்ட வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு (படம்) 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் கடந்த 2017ம் ஆண்டு சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு டெல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. சிறையில் இருக்கும் அவருக்கு நேற்று கூடுதல் தண்டனை விதிக்கப்பட்டது.

