கொவிட்-19ஐ தேசிய பேரிடராக அறிவித்த இந்தியா; மருத்துவ செலவை ஏற்பதுடன் இழப்பீடும் உண்டு

கொவிட்-19ஐ தேசிய பேரிடராக அறிவித்த இந்தியா; மருத்துவ செலவை ஏற்பதுடன் இழப்பீடும் உண்டு

1 mins read
ef7f70c1-5121-415f-94aa-ef91ec3e08d1
கொரோனா கிருமிப்பரவல் அச்சத்தால் மூடப்பட்ட கடைத்தொகுதியின் முன்னே முகக்கவசங்களுடன் பாதுகாவல் அதிகாரிகள். படம்: இபிஏ -

கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் இருவர் உயிரிழந்துள்ளனர், சுமார் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா கிருமித்தொற்று பற்றிய அச்சம் மக்களிடையே வெகுவாகப் பரவியுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இதை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா கிருமித்தொற்று பாதிப்பை எதிர்கொள்ள இந்தியா தீவிர நடவடிக்கை எடுப்பதன் ஓர் அங்கமாக, அதனை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது.

இவ்வாறு அறிவிப்பதன் மூலம் மாநில பேரிடர் மீட்பு நிதியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும், உயிரிழந்தவர்கள் குடுப்பதினாருக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#கொவிட்-19 #கொரோனா #இந்தியா

குறிப்புச் சொற்கள்