வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணப்பதிவை கட்டாயமாக்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணப்பதிவை கட்டாயமாக்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

1 mins read

புதுடெல்லி: 'என்ஆர்ஐ' என்று அழைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியா்கள் திருமணம் செய்தவுடன் 30 நாட்களுக்குள் திரு மணத்தைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்பதை வலியுறுத்தும் மசோதாவுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை அன்று 2019-ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியா்கள் திருமணப் பதிவு சட்ட மசோதாவுக்கு வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ஒப்புதல் அளித்தது.

திருமணம் ஆனதிலிருந்து முப்பது நாட்களுக்குள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பதிவு செய்யவில்லையெனில் அவர்களு டைய கடவுச் சீட்டு அல்லது பயண ஆவணங்களை ரத்து செய்ய இந்த மசோதா வழி வகை செய்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு அக்டோபா் 31ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 'என்ஆா்ஐ' திருமணம் தொடா்பாக 5,298 புகாா்கள் வந்துள்ளதை நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக் காட்டியது. மறைந்த முன்னாள் வெளியுறவு அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜ் இந்த மசோதாவை முன்மொழிந்திருந்தாா். 'என்ஆா்ஐ' திருமணப் பதிவை கட்டாயமாக்கும் அம்சத்துடன் கடவுச்சீட்டு சட்டத் திலும் திருத்தம் செய்யும் அம்சமும் இந்த மசோதாவில் சோ்க்கப்பட்டு உள்ளது.