இந்தியாவில் 2வது மரணம்

இந்தியாவில் 2வது மரணம்

2 mins read
6b02d1b8-04d0-4545-82d9-8894f994ff87
பெங்களூரு இன்ஃபோசிஸ் அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா கிருமி தொற்றியிருக்கலாம் என்ற அச்சத்தில் அங்கிருந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்ட 2வது நபர் உயி­ரி­ழந்­துள்­ளார்.

டெல்­லி­யைச் சேர்ந்த 69 வயது பெண்­ணுக்கு சளிக்­காய்ச்­சலும் இரு­மலும் இருந்­த­தால் மருத்­து­வ ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

அவ­ருக்கு நடத்­தப்­பட்ட மருத்­துவ பரி­சோ­த­னை­யில் கொரோனா பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டது.

இதை­ய­டுத்து அவ­ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பல­னின்றி அவர் உயிரி ழந்தார். அவர் கொரோனா கிரு­மிக்­குப் பலி­யா­னதை டெல்லி அர­சும் மத்­திய சுகா­தார அமைச்­சும் உறுதி செய்­துள்­ளன.

கடந்த மாதம் அந்­தப் பெண்­ணின் மகன் இத்­தாலி, சுவிட்­சர்­லாந்து ஆகிய நாடு­க­ளுக்­குச் சென்று­விட்டு டெல்லி திரும்­பி­யி­ருந்­தார்.

அதன் பிற­கு­தான் அவ­ருக்கு உடல் நலம் பாதிக்­கப்­பட்­டது. அவ­ரது தாயா­ரும் உடல் நலக்­கு­றை­வால் பாதிக்­கப்­பட்­டார்.

இதை­ய­டுத்து இரு­வ­ரும் கடந்த 7ஆம் தேதி டெல்லி ராம் மனோ­கர் லோதியா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டனர்். இரண்டு நாட்­களில் அப்­பெண்­ணின் உடல்­நிலை மட்டும் மோசம் அடைந்­த­தால் தீவிர சிகிச்சை பிரி­வுக்கு அவர் மாற்­றப்­பட்டார். ஆனால் சிகிச்சை பல­னின்றி நேற்று முன்­தி­னம் அவர் இறந்­தார்.

அந்­தப் பெண் ஏற்­க­னவே நீரி­ழிவு, உயர் ரத்த அழுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்­ட­வர் என தெரிகிறது.

இதற்கு முன்பு கர்­நா­டக மாநி­லம் கலப்­புர்­கி­யைச் சேர்ந்த 76 வயது முதி­ய­வர் ஒரு­வர் கடந்த 11ஆம் தேதி கிரு­மித் தொற்­றுக்கு பலி­யா­னார்.

இவர், சமீ­பத்­தில் சவுதி அரே­பி­யா­வி­லி­ருந்து திரும்­பி­ய­வர். இது, இந்­தி­யா­வில் கிரு­மி­யால் ஏற்­பட்ட முதல் பலி­யா­கும்.

இதற்­கி­டையே வெள்­ளிக் கிழமை அன்று கர்­நா­டகா மாநி­லத்­தின் பெங்­க­ளூரு நக­ரில் கொரோனா கிருமி அச்­சம் கார­ண­மாக இன்­ஃபோ­சிஸ் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து ஊழி­யர்­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­னர். கொரோனா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­தாக நம்­பப்­படும் ஒரு­வ­ரு­டன் இன்­ஃபோ­சிஸ் அலு­வ­லக ஊழி­ய­ருக்கு ேநரடி தொடர்பு இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இதை­ய­டுத்து இன்­ஃபோ­சிஸ் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து ஊழி­யர்­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

"முன்ெனச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக ஐஐ­பி­எம் கட்­ட­டத்­தி­லி­ருந்து நாங்­கள் வெளி­யே­றி­னோம்," என்று இன்­ஃபோ­சிஸ் அறிக்கை குறிப்­பிட்­டது. இந்­தி­யா­வில் இது­வரை 83 பேர் கொரோனா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மாநில அர­சு­கள் வெளி­யிட்­டுள்ள தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் பார்த்­தால் இந்­தி­யா­வில் 91 பேர் கொரோனா கிருமியால் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தாக கூறப்­ப­டு­கிறது.