ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஏழு மாதங் களுக்குப் பிறகு அண்மையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான குலாம் நபி ஆசாத்தை நேற்று சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், கைதான அனைத்து அரசியல் தலைவர்களையும் மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜம்மு-காஷ்மீருக்கான மாநில சிறப்பு தகுதியை பறித்து, இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது இங்கு வாழும் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்ட குலாம் நபி ஆசாத், பறிக்கப்பட்ட மாநில சிறப்பு தகுதியை மீண்டும் வழங்க வேண்டும் என்றார்.

