கைபேசி விலை உயரும்

கைபேசி விலை உயரும்

1 mins read
448e78ec-ca9a-492f-ae3c-9afae7c3c1b7
கைபே­சி­க­ளுக்­கான வரியை உயர்த்­து­வது என  ஜிஎஸ்டி கவுன்­சில் முடிவு செய்­துள்­ளது. படம்: ஊடகம் -

புது­டெல்லி: கைபே­சி­க­ளுக்­கான வரியை உயர்த்­து­வது என ஜிஎஸ்டி கவுன்­சில் முடிவு செய்­துள்­ளது. இனி கைபே­சிக்­கான சரக்கு மற்­றும் சேவை வரி 18 விழுக்­கா­டாக இருக்­கும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தி­னம் டெல்­லி­யில் மத்­திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் தலை­மை­யில் ஜிஎஸ்டி கவுன்­சில் கூட்­டம் நடை­பெற்­றது. அதில் பல்­வேறு முக்­கிய முடி­வு­கள் எடுக்­கப்­பட்­டன.

குறிப்­பாக கைபேசி கரு­வி­கள் மற்­றும் குறிப்­பிட்ட உதிரி பாகங்­க­ளுக்­கான சரக்கு மற்­றும் சேவை வரியை 12 விழுக்­காட்­டி­லி­ருந்து 18 விழுக்­கா­டாக உயர்த்­து­வது என முடிவு செய்­யப்­பட்­டது.

இந்த வரி உயர்வு எதிர்­வ­ரும் ஏப்­ரல் முதல் தேதி­யில் இருந்து அம­லுக்கு வரும் என மத்­திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ராமன் தெரி­வித்­துள்­ளார். நாட்­டின் பொரு­ளா­தார நிலை­மைக்கு ஏற்ப சில முடி­வு­கள் எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

மத்திய அரசின் முடிவால் கைபேசி கருவிகளின் விலை அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் தெரி வித்துள்ளனர்.