ஹைட்ரோ கார்பன் திட்டம்: அரசு விளக்கம்

ஹைட்ரோ கார்பன் திட்டம்: அரசு விளக்கம்

1 mins read

புதுடெல்லி: சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதிகளை வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டிருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

திட்டங்களில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநிலங்களவையில்

அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இதைச் சுட்டிக்காட்டிய திமுக உறுப்பினர் கனிமொழி, டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ஏதும் இனி செயல்படுத்தப்பட

மாட்டாது என மத்திய அரசு உறுதி அளிக்குமா? எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜவடேகர், இது முழுக்க முழுக்க மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு நிர்ணயக் குழுவின் முடிவைச் சார்ந்தது

என்றும் இந்த விவகாரம் மத்திய அரசு கவனத்துக்கு கொண்டு வரப்படாது என்றும் திட்டவட்ட

மாகக் குறிப்பிட்டார்.