முதல்வர், துணை முதல்வரை கலவரக் குற்றவாளிகளாக சித்திரித்து சுவரொட்டி

முதல்வர், துணை முதல்வரை கலவரக் குற்றவாளிகளாக சித்திரித்து சுவரொட்டி

1 mins read

லக்னோ: முதல்­வர், துணை முதல்­வரை கல­வ­ரக் குற்­ற­வா­ளி­க­ளாக சித்­திரித்து காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் வைத்த பதா­கை­க­ளால் உத்­த­ர­ப் பி­ர­தே­சத்­தில் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

இது தொடர்­பாக சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என பாஜ­க­வி­னர் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

அண்­மை­யில் குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டத்­திற்கு எதி­ராக நடை­பெற்ற போராட்­டங்­க­ளின்­போது உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் கல­வ­ரம் வெடித்­தது. அப்­போது பொதுச் சொத்­து­க­ளுக்­குச் சேதம் விளை­வித்­த­தாக அடை­யா­ளம் காணப்­பட்­ட­வர்­க­ளின் பெயர், முக­வரி, புகைப்­ப­டம் உள்­ளிட்ட விவ­ரங்­க­ளு­டன் கூடிய பதா­கை­கள் மாநி­லம் முழு­வ­தும் அரசு ஏற்­பாட்­டில் வைக்­கப்­பட்­டன.

இதற்கு காங்­கி­ரஸ் தரப்­பில் கடும் எதிர்ப்­புக் கிளம்­பி­யது. ஆனால், இந்த எதிர்ப்­பைப் புறந்­தள்­ளிய அம்­மா­நில முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத், பொதுச்­சொத்­து­க­ளுக்­கான இழப்­பீடு கல­வ­ரக்­கா­ரர்­க­ளி­ட­மி­ருந்து வசூ­லிக்­கப்­படும் எனத் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில் முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் மீது கொலை, கல­வ­ரத்­தில் ஈடு­பட்­டது உள்­ளிட்ட 5 வழக்­கு­கள் இருப்­ப­தா­க­வும், துணை முதல்­வர் மீது 11 வழக்­கு­கள் உள்­ளன என்­றும் காங்­கி­ரஸ் வைத்­துள்ள பதா­கை­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மேலும் இந்த இரு­வ­ரால் சேதப்­ப­டுத்­தப்­பட்ட பொதுச்­சொத்­து­க­ளுக்­கான இழப்­பீடு ஏன் இன்­னும் வசூ­லிக்­கப்­ப­ட­வில்லை? என்­றும் அந்­தப் பதா­கை­களில் கேள்வி எழுப்­பப்­பட்­டுள்­ளது.