புதுடெல்லி: டெல்லியில் திடீரென்று பெய்த ஆலங்கட்டி மழை மக்களுக்கு உற்சாகமளித்தது.
நேற்று காலை நொய்டா, புர்கான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. சில இடங்களில் பனிப்பொழிவும் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
இந்தத் திடீர் ஆலங்கட்டி மழை பெய்தபோது சாலையில் சென்ற பலர் உற்சாகத்துடன் மழை நீரில் நனைந்தனர். மேலும் பலர் மழையைத் தங்கள் கைபேசியில் காணொளியாக பதிவு செய்தனர்.
மழை பெய்த சில நிமிடங்களில் சமூக வலைத்தளங்களில் இந்தக் காணொளிப் பதிவுகளைக் காண முடிந்தது. டெல்லியில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்பே தெரிவித்திருந்தது.
கடந்த சில தினங்களாக டெல்லியில் கலவரம், திடீர் வன்முறைச் சம்பவங்களால் அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டது.
இந்நிலையில் திடீர் ஆலங்கட்டி மழையும் பனிப்பொழிவும் தங்களுக்கு உற்சாகம் அளித்திருப்பதாக டெல்லி வாழ் மக்கள் தெரிவித்தனர்.
இந்த மழை மேலும் ஓரிரு நாட்கள் நீடித்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினர். டெல்லி மக்கள் திடீர் மழையால் கொரோனா பீதியை கூட மறந்துவிட்டனர்.

