புதுடெல்லி: உலக நாடுகளை அச்சு றுத்தலுக்கு ஆளாக்கி இருக்கும் கொரோனா கிருமி பரவல் அச்சம் காரணமாக ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து தாய கம் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்த மாணவர்கள், யாத்ரீகர்கள் உள்ளிட்ட 452 பேர் பத்திரமாகத் தாயகம் திரும்பினர்.
கொரோனா கிருமியால் பாதிக் கப்பட்ட ஈரான் நாட்டில் இருந்து இரு ஏர்-இந்தியா விமானங்களில் நேற்று காலை 234 பேர் தாயகம் திரும்பினர்.
இதேபோல் இத்தாலியில் இருந் தும் 218 பேர் இந்தியாவுக்கு பாது காப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.
"ஈரானில் சிக்கித் தவித்த 131 மாணவர்கள் உள்பட 234 பயணிகளும் பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
"அவர்கள் ஜெய்சல்மாரில் உள்ள இந்திய ராணுவ மையத்தில் 14 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட உள்ளனர்," என்று மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட் டுள்ள ஜெய்சங்கர், "103 சுற்றுலாப் பயணிகளும் 131 மாணவர்களும் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர்.
"இந்திய-ஈரான் நாட்டு தூது வர்களுக்கு நன்றியும் பாராட்டு களும்," என்று அவர் தெரிவித் துள்ளார்.
ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்காக சிகிச்சை பெற்ற வர்களில் மேலும் 97 பேர் நேற்று உயிரிழந்ததைத் தொடர்ந்து இந் நோய்க்கு பலியானவர்களின் எண் ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,729ஆக உயர்ந்து உள்ளதாகவும் ஈரான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஈரான் நாட்டில் உள்ள இஸ்லாமிய புனிதத் தலங்களைத் தரிசிக்கவும் அந்நாட்டில் உள்ள பிரபல பல்கலைக் கழகங்களில் பயிலவும் சென்ற சுமார் 6,000 இந்தியர்கள் கொரோனா பீதியின் காரணமாக தாயகத்துக்கு திரும்ப விரும்பினர்.
அவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான நடவடிக் கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
ஏற்கெனவே இந்தியா அனுப்பி வைத்த ராணுவ விமானம் மூலம் கொரோனா அச்சத்துடன் அங்கு தவித்த 58 யாத்ரீகர்கள் கடந்த செவ்வாயன்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். கடந்த வெள்ளி அன்று 44 பேர் மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன் அடுத்தகட்டமாக இப்போது 234 இந்தியர்கள் தனி விமானம் மூலம் நேற்று தாயகத் துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், இத்தாலியில் இருந்து 211 இந்திய மாணவர்கள் உள்பட 218 பேர் நாடு திரும்பி உள்ளனர்.
மத்திய அரசின் முயற்சியால் 'ஏர் இந்தியா' சிறப்பு விமானம் மூலம் இத்தாலி நாட்டின் மிலான் நகரில் இருந்த 211 இந்திய மாணவர்கள் உள்பட 218 பேர் நாடு திரும்பினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 55 மாணவர்களும் அடங்கு வர்.
நாடு திரும்பிய அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

