கொவிட்-19: இந்தியாவுக்குள் நுழைய இந்தியர்களுக்கும் தற்காலிகத் தடை

கொவிட்-19: இந்தியாவுக்குள் நுழைய இந்தியர்களுக்கும் தற்காலிகத் தடை

1 mins read
8e032565-72c9-4883-b68d-a1c72f0814e3
புதுடெல்லி விமான நிலையத்தில் மூத்த பயணிகளுக்கு வழிகாட்டும் நிலைய ஊழியர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்திய கடவுச் சீட்டை வைத்திருக்கும் இந்தியர்களேயானாலும் சில நாடுகளிலிருந்து தாயகம் திரும்ப விரும்புபவர்களுக்கும் தற்போது தடையை நீட்டித்துள்ளது இந்தியா.

துருக்கி, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் இருப்போர் இம்மாத இறுதி வரை இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை.

மலேசியா, ஆஃப்கானிஸ்தான், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை; அவர்கள் இந்தியர்களாக இருந்தாலும் இந்தத் தற்காலிகத் தடை பொருந்தும்.

நாளை (மார்ச் 18) முதல் இந்தத் தடை நடப்புக்கு வரும். அந்த நாடுகளிலிருந்து இந்தியாவுக்குச் செல்பவர்களுக்கு விமானச் சேவை இல்லை என்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்களுக்கும் வெளிநாடுவாழ் இந்தியக் குடிமக்களுக்கும் (OIC) இந்தியாவுக்குள் நுழைய தடை விதிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டாலும் இன்று வரை இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (மார்ச் 17) மாலை 6 மணி வரை இந்தியாவில் மொத்தம் 137 பேரை கொரோனா கிருமி தொற்றிவிட்டது. அவர்களில் 24 பேர் வெளிநாட்டவர்கள். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மூவர் உயிரிழந்துவிட்டனர்; 33 பேர் உடல் நலம் தேறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டனர்.

#கொரோனா #கொவிட்-19 #இந்தியர் #இந்தியா

குறிப்புச் சொற்கள்