இந்தியர்கள் ஊர் திரும்ப தடை

2 mins read
adebbd5b-2842-4bd0-9278-a1c724e6b407
-

புது­டெல்லி: பிரிட்­டன், துருக்கி மற்­றும் ஐரோப்­பிய நாடு­களில் இருந்து இந்­தி­யர்­கள் தாய்­நாடு திரும்ப தற்­கா­லி­க­மாக தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இம்­மாத இறுதி வரை இந்­தத் தடை நடை­மு­றை­யில் இருக்­கும். அத்­து­டன், இந்­தி­யர்­கள் உட்­பட மலே­சியா, ஆப்­கா­னிஸ்­தான், பிலிப்­பீன்ஸ் ஆகிய நாடு­களில் இருந்து செல்­லும் எவ­ருக்­கும் இந்­தி­யா­வில் நுழை­யத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த மூன்று நாடு­க­ளில் இருந்தும் இம்­மா­தம் 31ஆம் தேதி வரை இந்­தி­யா­விற்கு விமானங்கள் இயக்கப்படாது என்று விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் தலைமை இயக்கு­ந­ர­கம் அறி­வித்­துள்­ளது.

முன்­ன­தாக, கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யில் இருந்து நிரந்­தர விசா தகு­தி­யான 'ஓசிஐ' அட்டை வைத்­தி­ருப்­போர் உட்­பட வெளி­நாட்­ட­வர்­கள் எவ­ரும் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை இந்­தி­யா­விற்­குள் நுழை­யத் தடை விதிக்­கப்­ப­டு­வ­தாக இந்­திய அர­சாங்­கம் அறி­வித்­தி­ருந்­தது.

இந்­தத் தடை அறி­விப்­பு­கள், பல்­வேறு விமா­னப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­க­ளின் சேவை­களில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் எனச் சொல்­லப்­ப­டு­கிறது. இம்­மாத இறுதி வரை இந்­தி­யா­விற்­கான விமான சேவை­களை ரத்து செய்ய வேண்­டிய நிலைக்கு அந்த நிறு­வனங்­கள் தள்­ளப்­பட்­டுள்­ளன.

வெளி­நாட்­ட­வர்­கள் இந்­தி­யா­விற்­குள் நுழை­யத் தடை விதிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே பல்­வேறு வெளி­நாட்டு, உள்­நாட்டு விமான நிறு­வ­னங்­களும் 500க்கும் மேற்­பட்ட விமான சேவை­களை ரத்து செய்து­விட்­டன.

இத­னி­டையே, கத்­தார், ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­கள், குவைத், ஓமான் ஆகிய நாடு­களில் இருந்து வரு­வோ­ரும் கட்­டா­ய­மாக 14 நாட்­களுக்­குத் தங்­க­ளைத் தனி­மைப்­படுத்­திக்­கொள்ள வேண்­டும் என இந்­திய அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது.

முன்­ன­தாக, சீனா, கொரியா, ஈரான், ஸ்பெ­யின், பிரான்ஸ், ஜெர்­மனி, இத்­தாலி ஆகிய ஏழு நாடு­களில் இருந்து வரு­வோர் இந்த நடை­மு­றைக்கு உட்­ப­ட­வேண்­டும் என கடந்த வாரம் அறி­விப்பு வெளி­யா­னது.