இந்தியா: கண்காணிப்பில் 54,000 பேர்

இந்தியா: கண்காணிப்பில் 54,000 பேர்

1 mins read
8b859133-76ef-475f-bbfa-f0c07cea0c1c
நாடு முழு­வ­தும் கிட்­டத்­தட்ட 54,000 பேர் சமூ­கக் கண்­கா­ணிப்­பின்­கீழ் இருப்­ப­தா­க­வும் சுகா­தார ஊழி­யர்­கள் அவர்­க­ளு­டன் தொடர்­பில் இருப்­ப­தா­க­வும் சுகா­தார அமைச்­சர் ஹர்­ஷ­வர்­தன் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.  கோப்புப்படம்: ஊடகம் -

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் கிட்­டத்­தட்ட 54,000 பேர் சமூ­கக் கண்­கா­ணிப்­பின்­கீழ் இருப்­ப­தா­க­வும் சுகா­தார ஊழி­யர்­கள் அவர்­க­ளு­டன் தொடர்­பில் இருப்­ப­தா­க­வும் சுகா­தார அமைச்­சர் ஹர்­ஷ­வர்­தன் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

அத்­து­டன், கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் அக்­க­றை­யு­டன் பணி­யாற்றி வரும் மருத்­து­வர்­க­ளை­யும் துணை மருத்­துவ ஊழி­யர்­களை­யும் அவர் வெகு­வா­கப் பாராட்­டி­னார். தங்­க­ளது வட்­டா­ரங்­களில் உள்ள 'தனி­மைப்­ப­டுத்­தும் நிலை­யங்­க­ளுக்கு' செல்­லு­மாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வலி­யு­றுத்­திய அவர், அங்­குள்ள வச­தி­களை மேம்­ப­டுத்த உத­வு­மா­றும் பற்­றாக்­குறை ஏற்­ப­டா­மல் பார்த்­துக்­கொள்­ளு­மா­றும் கேட்­டுக்­கொண்­டார். கிருமி பாதிப்­புள்­ளோ­ருக்­குச் சிகிச்சை அளிப்­ப­தில் இந்­திய மருத்­துவ ஆய்­வுக் கழக விஞ்­ஞா­னி­கள் அனைத்­து­லக ஆய்­வா­ளர்­க­ளு­டன் தொடர்­பில் இருப்­ப­தா­க­வும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.